Direct Access Guarantee திட்டம் Start Up (DAGS Start Up)

Print

தகுதி வரையறைகள்

  • பின்வரும் வரையறைகளுக்கு சிறிய மற்றும் நடுதர வியாபரம்(SMES)உடன்பட்டதாக இருத்தல்(விவரங்களுக்கு , இங்கே கிளிக் செய்க)
  • மலேசிய கட்டுப்பாட்டில் அல்லது மலேசியர்களின் சொந்த  வியாபரமாக இருப்பதோடு, 1965- ஆம் நிறுவனங்கள்  சட்டம் கீழ் தனியுரிமை அல்லது கூட்டு நிறுவனத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
  • ஒரு (1) ஆண்டு மட்டும் அல்லது குறைவாக செயற்பாட்டில் இருந்திருக்க வேண்டும்.

கடன் உத்திரவாத விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறை

அனைத்து  உத்திரவாத கடனை விண்ணப்பிக்க  தேவையான ஆவணங்களை சேர்ந்து ஒரு நிலையான விண்ணப்ப படிவத்தை பயன்படுத்தி  சி.ஐி.சி-க்கு நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

கடன் தொகை மற்றும் உத்தரவாத பாதுகாப்பு

RM50,000.00 முதல்  RM2.0 மில்லியன் வரை கடன் தொகை  பெறலாம்.

உத்தரவாத பாதுகாப்பு 100% வரை மற்றும் அதிகபட்ச ஐந்து (5) ஆண்டுகளுக்கு கடன் முதிர்ச்சி அடையும் வரை  செல்லுபடியாகும்.

கடன் வசதிகள்

தவணைக் கடன் ( Term Loan) & overdraft கடன் (OD)

கடன் வாங்கும் பொழுது ஏற்படும் செலவுகள்

ஆண்டு வட்டி விகிதம்(BLR) கடன் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.

உத்தரவாத கட்டணம்

  • பாதுகாப்பற்றது – ஒரு வருடத்திற்கு 0.75% முதல் 5.75 % வரையாகும்.
  • பாதுகாக்கப்பட்டது- ஒரு வருடத்திற்கு 0.50% முதல் 3.60 % வரையாகும்.

அதிக ஆபத்துள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உத்தரவாத கட்டணம் உயர்வாக அறிவிக்கப்படும். அதேசமயம், குறைந்த ஆபத்துள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு குறைந்த உத்தரவாத கட்டணம்  அறிவிக்கப்படும். உத்தரவாத விலை வரம்பை கடன் பெறுபவரின் நம்பகத்தன்மை மற்றும் ரிஸ்க் ரேட்டிங் அடிப்படையில் கவனித்து அனுசரிக்கப்பட்டது.

i) உத்தரவாத கட்டணம் செலுத்துதல் .

  • புதிய உத்தரவாத கடிதம்(LG)- நிதி நிறுவனம் கோரிக்கைக்கு பின் புதிய   உத்தரவாத கடிதம்(LG)  மீது செலுத்த வேண்டும்.
  • ஆண்டு நிறைவு பெற்ற உத்தரவாத கடிதம் – ஆண்டு நிறைவு தேதி அன்று அல்லது முன் கட்டணம் செலுத்த வேண்டும்.

ii) உத்தரவாத கட்டணப் பணம் திருப்பிக்கொடுத்தல்

  • மாத அடிப்படை மதிப்பிட்டில் உத்தரவாதம் கட்டணம் திருப்பிக்  கொடுக்கப்படும். இரத்து செய்யப்பட்ட அல்லது திருத்தப்பட மாதம் முதல்  உத்தரவாத நிறைவு நாள் வரை    பயன்படுத்திய காலத்தை கணக்கிடப்படுகிறது.
  • 2 வது ஜனவரி 2013 முதல் தொடங்கி, சி.ஐி.சி மதிப்பிடு அடிப்படையில் இரத்து செய்யப்பட்ட அல்லது திருத்தப்பட்ட உத்தரவாத கட்டணத்தை திருப்பி தருகிறது.

இங்கே உங்கள் விவரங்களைக் கொடுங்கள். நாங்கள் உங்களை மறுபடியும் தொடர்பு கொள்வோம்.

    உங்கள் பெயர்:

    மின்னஞ்சல்:

    தொடர்பு எண்:

    விபரங்கள்:

    சி.ஜி.சி அதன் தயாரிப்பு மற்றும் சேவைகள் தொடர்பா க எந்த ஒரு மூன்றாம் தரப்பினரையும் நியமிக்கவில்லை என்று அறிவிக்கின்றோம்.

    சி.ஜி.சி-யின் ஏஜென்டாக ஒரு மூன்றாவது தரப்பு அல்லது பிரதிநிதி போல் ஆள்மாறாட்டம் தொடர்பாக ஏதாவது தகவல் அறிந்தால் , தயவு செய்து எங்களை பின்வரும் அகப்பக்கத்தின் வழி தொடர்புக் கொள்ளவும்:

    வாடிக்கையாளர் சேவை மையம் - https://www.cgc.com.my/client-service-centre/?lang=ta
    சி.ஜி.சி-யின் கிளைகள் - https://www.cgc.com.my/cgc-branches/?lang=ta