வணக்கம்,
எங்கள் வலைத்தளத்தில் உங்களை வரவேற்பது என் பாக்கியம்.
2015 – இல் சிறு மற்றும் நடுத்தர நிறுவனத்தை மேம்படுத்துவதற்காகவும் ஊக்குவிப்பதற்காகவும் நாங்கள் மேற்கொன்ட முயற்சிகளைப் பகிர்ந்துக் கொள்ள என்னை நீங்கள் அனுமதிக்குமாறு வேண்டுகிறேன். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, சிறிய மற்றும் நடுத்தர நிருவனங்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த எங்களின் நிதி மற்றும் சேவைகளை நாடலாம். நாங்கள் பல்வேறு நிதி நிறுவனங்களின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர நிருவனங்களுக்காக மூலோபாய கூட்டணியை உருவாக்கியுள்ளோம். நாங்கள், நாடு முழுவதும் உள்ள ‘க்ளினிக் உசஹவான்’ (‘Klinik Usahawan’), சிறிய மற்றும் நடுத்தர சமூகம் , மலேசிய தேசிய வங்கி (‘Bank Negara Malaysia’), சிறிய மற்றும் நடுத்தர கார்ப்பரேஷன் மற்றும் பிற அரசாங்க முகவர் மற்றும் மாநாடுகள் மூலம் கருத்தரங்குகள் போன்ற பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். சுமார் 3,800 தொழில் முனைவோர்கள் இந்நிகழ்வில் பயனடைந்துள்ளனர். நீங்கள் எங்கள் நிகழ்வுகளை மேலும் படிக்க விரும்பினால், இங்கே சொடுக்கவும்.
எங்கள் வலைத்தளம் நான்கு முக்கிய மொழிகளில் உள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். அவை முறையே மலாய் மொழி, சீன மொழி, தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழியாகும். இதன் மூலம், பங்குதாரர்களுக்கு எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய தகவல்களைப் பரப்ப முடிகிறது. மே மாதம் 2015 – இல், நமது இஸ்லாமிக் வோல்சேல் கேரன்த்தி’ (‘Islamic Wholesale Guarantee (WG-i) திட்டம் எசோசியேஷன் ஒவ் டெவெலப்பென்ட் பைனான்சிங் இன்ஸ்திதுசென்ட்ஸ் இன் ஆசியா என்ட் தெ பசிபிக்’, (‘Association of Development Financing Institutions in Asia and the Pacific’) (‘ADFIAP’) மூலம் வியாபார அபிவிருத்தி பிரிவின் கீழ் ‘2015 அபிவிருத்தி விருது‘ வழங்கப்பட்டது. ஜூன் மாதம் 2015 – இல், ‘பிஸ்முலா – இ’டைரெக்ட் பைனான்சி்ங் (‘BizMula-i Direct Financing’) சர்வதேச ரீதியில் ‘தெ கா்ல்ருச் சஸ்தெனபல் பைனான்ஸ் எவா்ட்‘ (‘The Karlsruhe Sustainable Finance Awards’) எனும் விருது ‘க்லோபல் சஸ்தனபல் பைனன்ஸ் கான்ப்ரென்ஸ் – இல் (‘Global Sustainable Finance Conference in Karlsruhe’) ஜெர்மனியில் கிடைத்தது.
நாங்கள் நிதி துறையில் நமது மூலோபாய பங்காளிகளைப் பாராட்டும் வகையில் சி.ஜி.சி – இன் உயர்மட்ட ‘எஸ்ம்ஈ’ (‘SME’) ஆதரவாளர்களுக்கு விருதுளை வழங்கி கௌரவித்தோம். முதல் முறையாக, நாங்கள் மலேசியாவில் வரவிருக்கும் மற்றும் வெற்றிகரமான சிறிய மற்றும் நடுத்தர நிருவனங்களுக்கு எங்கள் ஆதரவை வழங்கும் வகையில் ‘தெ ஸ்டார் பிஸ்னஸ் அவுட்ஸ்தேன்டிங் எவர்ட்ஸ்’- இல் (‘The Star Outstanding Business Awards’) கலந்துக்கொண்டோம்.
மே 2014 – இல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிஸ்முலா – இ’ (BizMula-i) வெற்றியைத் தொடர்ந்து, ‘பிஸ்வனிதா – இ‘ (BizWanita-i) பெண்கள் தொழில் முனைவோர் எனும் மற்றொரு புதுமையான நேரடி நிதியுதவித் தயாரிப்பை அக்டோபர் 2015 – இல் தொடங்கினோம். இந்நேரடி நிதியுதவிக் குறிப்பாக பெண்கள் தொழில் முனைவோர்க்காக வடிவமைக்கப்பட்டது. இந்நிதி பெண்கள் தலைமையிலான வணிக வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கான நிதி சுதந்திரம் மற்றும் வெற்றிகாகவும் வழங்கப்படுகிறது.
டிசம்பர் 2015 – இல், இயற்கை பேரழிவால் ஏற்பட்ட நிதி சவால்களைச் சமாலிப்பதற்காக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் நேரடி நிதியுதவியாக ‘ஸ்பெஷல் எசிஸ்டன்ட் ஸ்கிம்‘ – ஐ (SAS-i) அறிமுகப்படுத்தினோம். இந்நிதி மூலதனம் மற்றும் / அல்லது சம்பாதித்த சொத்துக்கள், பேரழிவின் போது சேதமடைந்தப் பொருட்களைச் சீர் செய்யவும், புதியதாக வாங்குவதற்காகவும் வழங்கப்படும். உதாரணத்திற்கு பருவமழையின் போது ஏற்படும் வெள்ளம்.
நமது சமுதாயத்தில் வாடுகின்ற உறுப்பினர்களுக்குத் தோல் கொடுத்து, அவர்களை வெற்றிப் பாதைக்கு அழைத்து வருவதே சி.ஜி.சி – இன் ‘டிஎன்ஏ’ – இல் (‘DNA’) ஒரு பகுதியாக உள்ளது. திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் கொண்டு சேர்த்தல் மற்றும் பிற காரணங்களினாலும் ஆதரவு வழங்குதல் போன்ற தொடர்ச்சியான நிகழ்வுகளை எங்கள் கூட்டாண்மைச் சமூக பொறுப்பின் (‘சி.எஸ்.ஆர்’) (‘Corporate Social Responsibility’) (‘CSR’) மூலம் வழங்குகிறோம். நம் சக மலேசியர்களின் நலனுக்காக, ஒரு பரந்த குறுக்குவாட்டில் சென்றடைய தார்மீக மற்றும் நிதி ஆதரவு திட்டங்கள் தீட்டப்படும்.
இறுதியாக, நான் என்னுடைய சக பணியாளர்களின் சார்பாக, எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் சி.ஜி.சி. – க்கு தொடர்ந்து நம்பிக்கையுடன் ஆதரவு வழங்கியதற்கு நன்றி கூற விரும்புகிறேன். 2016-ல் பல சவால்கள் இருந்தாலும், நம் அர்ப்பணிப்பு மற்றும் பிரதிஷ்டையின் மூலம் மேலும் சாதிக்க முடியும் என நம்புகிறேன்.
வசாலம் / இப்படிக்கு
டத்தோ முகமட் சம்ரி முகமட் இஷாக்


